2013-ல் ரிலாக்ஸ் விருது பெரும் அதிஷ்டசாலிகள்

2013-ல் ரிலாக்ஸ் விருது பெரும் அரசியல் அதிஷ்டசாலிகள் யார் என்று வாங்க பார்க்கலாம்.

சிறந்த டாக்டர் சொல் கேட்பவர் விருது - பண்ருட்டி ராமச்சந்திரன்

டாக்டர் தனது உடல் நலத்தைக் கவனிக்கச் சொன்னார் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலை விட்டே விலகி ஓய்வெடுக்கச் சென்ற பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இந்த ஆண்டுக்கான ‘சிறந்த டாக்டர் சொல் கேட்பவர்’ விருது. இந்த விருதுடன் சிறப்புப் பரிசாக ஒரு ஈசி சேரும் வழங்கப்படுகிறது.

சிறந்த தேர்தல் விடாகண்டர் விருது - விஜயகாந்த்

தமிழர்கள் வட இந்தியாவுக்கு படை எடுத்துச் சென்றதைப் பற்றியெல்லாம் புத்தகங்களில்தான் படித்திருப்போம். ஆனால் ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கும்போது அதைக்கூட புறக்கணித்துவிட்டு டெல்லி தேர்தலில் போட்டியிட்ட கேப்டனுக்கு சிறந்த தேர்தல் போட்டியாளர் விருது. இந்த விருதுடன் சிறப்பு பரிசாக ‘30 நாட்களில் இந்தி படிப்பது எப்படி?’ என்ற புத்தகமும் வழங்கப்படுகிறது.

சிறந்த ரத்ததானம் செய்தவர் விருது - ராகுல் காந்தி

மத்தியப் பிரதேச மாவட்டத்தில் ஒரே இரவில் 25 ஆயிரம் கொசுக்கள் தன்னைக் கடிக்க அனுமதித்த ராகுல் காந்திக்கு இந்த ஆண்டின் சிறந்த ரத்ததானம் செய்தவர் விருது. இந்த விருதுடன் சிறப்பு பரிசாக அவருக்கு ஒரு பிளேட் ஏழை வீட்டு பழைய சாதம்.


சிறந்த கடித எழுத்தாளர் விருது - ஜெயலலிதா

மின்சாரம் குறைந்தால் ஒரு கடிதம், மீனவர்கள் தாக்கப்பட்டால் ஒரு கடிதம், காமன்வெல்த் மாநாடு நடந்தால் ஒரு கடிதம் என்று எடுத்ததற்கெல்லாம் மன்மோகன் சிங்குக்கு கடிதங்களாக எழுதித் தள்ளிய ஜெயலலிதாவுக்கு இந்த ஆண்டின் சிறந்த கடித எழுத்தாளர் விருது. சிறப்பு பரிசாக கொடநாட்டுக்கு ஒரு இலவச சீசன் டிக்கெட்.


சிறந்த தூண்டில் மனிதர் விருது - கருணாநிதி

‘விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்’ என்று ஒரு பக்கமும், ‘மோடி ரொம்ப நல்லவர்’ என்று மற்றொரு பக்கமும், மாறி மாறி தேர்தல் கூட்டணிக்காக தூண்டில் போட்டுவரும் கருணாநிதிக்கு சிறந்த தூண்டில் மனிதர் விருது. விருதுடன் சிறப்பு பரிசாக அவருக்கு ரொம்பப் பிடித்த பாராட்டு விழா.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : The Hindu



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top