‘டைட்டானிக்' தினம் + காணாமல் போன பிரதமர்

‘டைட்டானிக்' தினம்

மிகப்பெரிய ஆடம்பரக் கப்பலான டைட்டானிக், தனது முதல் பயணத்தின்போதே மூழ்கி பல உயிர்களை பலிவாங்கியதை தத்ரூபமாக காட்டியிருக்கும் பாலிவுட் சூப்பர் ஹிட் படம்தான் ‘டைட்டானிக்’


படம் முழுக்க கப்பலை மட்டுமே காட்டியிருந்தால் அதில் விறுவிறுப்பாக இருக்காது என்பதால், அதில் பயணிக்கும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகள் இருந்தன. குறிப்பாக அழகான காதல் ஜோடியின் ஆழ்ந்த காதலை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக மிகவும் சிரத்தை எடுத்து காட்சிகளை அமைத்த இயக்குனர் கேமரூன், படத்தை 1997-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையிட திட்டமிட்டிருந்தார். ஆனால் தயாரிப்புக்கு பின்னர் தொழில்நுட்ப பணி காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் டைட்டானிக் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றே எதிர்பார்த்தனர்.

இதுபோன்ற சர்ச்சைகளையெல்லாம் கடந்து, 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி டைட்டானிக் வெளியிடப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட வசூலை அள்ளிக் குவித்ததுடன் 11 விருதுகளையும் வென்று சாதனை படைத்தது.

லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள டைட்டானிக் ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.

காணாமல் போன ஆஸ்திரேலியா பிரதமர்

ஆஸ்திரேலியாவின் 17-வது பிரதமராக ஹரல்ட் எட்வர்ட் ஹோல்ட் 1966-1967 காலப்பகுதியில் பதவி வகித்து வந்தவர். இவர் விக்டோரிய மாநிலத்தில் செவியட் கடலில் 1967-ம் ஆண்டும் டிசம்பர் மாதம் இதேநாளில் குளிக்கும்போது திடீரென காணாமல் போனார். அவர் இறந்ததாக ஆஸ்திரேலியா அரசு டிசம்பர் 19-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


ஹோல்ட் மொத்தம் 32 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் வியட்நாம் போர் முக்கிய வெளிநாட்டு கொள்கை பிரச்சினையாக இருந்தது. இப்போரில் கூடுதலான இராணுவத்தினரை ஈடுபட வைத்தார்.

இவருடைய மரணம் இதுவரையில் மர்மமாக இருந்தாலும் பெரும்பான்மையானோர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்றே நம்புகின்றனர். அவரது உடல் இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில், 2005-ம் ஆண்டு மரண விசாரணை அதிகாரியினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ஹோல்ட் கடலில் மூழ்கியே இறந்தார் என அறிவிக்கப்பட்டது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top