எதிர்பார்ப்புக்கு மீறி வசூல் சாதனை - கமல் மகிழ்ச்சி!

கம‌ல் தயா‌ரி‌த்து, இய‌க்‌கி, நடி‌த்து‌ள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தமிழக அரசு நீக்கியுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் 524 தியேட்டர்களில் விஸ்வரூபம் படம் வரும் வெள்ளிக்கிழமை (7-ஆம் தேதி) வெளியாகும் என்று தெரிகிறது.

144 தடை உத்தரவு பெற்ற முதல் தமிழ்படம்

தமிழக வரலாற்றில் சமீபகாலத்தில் ஒட்டுமொத்தமாக அத்தனை மாவட்டங்களிலும் ஒரு சினிமாப் படத்துக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்த்கது.


2-ஆம் வார இறுதியில் ஒரு ஆங்கிலப் படத்தின் சராசரி வசூலை விட அதிகமாக விஸ்வரூபம் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசூல் விபரங்கள் கீழே :

விஸ்வரூபம் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.35 கோடிகள்
விஸ்வரூபம் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 9..10 கோடிகள்
விஸ்வரூபம் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.56 கோடிகள்
விஸ்வரூபம் நான்காம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 6.23 கோடிகள்
விஸ்வரூபம் 5-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.10 கோடிகள்
விஸ்வரூபம் 6-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.65 கோடிகள்
விஸ்வரூபம் 7-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.28 கோடிகள்
விஸ்வரூபம் 8-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.05 கோடிகள்
விஸ்வரூபம் 9-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 7.35 கோடிகள்
விஸ்வரூபம் 10-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.70 கோடிகள்
விஸ்வரூபம் 11-ஆம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8.10 கோடிகள்

11-ஆம் நாள் வசூல் 85.47 கோடிகள்.

சமீபத்திய எந்த தமிழ்ப் படமும் இங்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. தமிழ்நாடு தவிர பிற இடங்களில் படம் நல்ல வரவேற்ப்பும் வசூலும் ஆகிறது என்கிற தகவல் கமலுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

லண்டனிலும் இதர பிரிட்டிஷ் நகரங்களிலும்கூட விஸ்வரூபத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. லண்டனில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தப் படம் ஓடுகிறசு. விரைவில் தமிழ்நாட்டிலும் நிலை வரும் என எதிர்பாக்கலாம்.

தமிழ் நாட்டிலும் வசூல் பெற வாழ்த்துக்கள் கமல் சார்!!!

ஹாட் நியூஸ்

விஸ்வரூபம் படத்தில் 7 காட்சிகளை எடிட் செய்து, அதாவது ஆடியோவை முற்றிலும் நீக்கிவிட கமல்ஹாசன் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் இந்தப் பணியை இந்தியாவில் செய்ய முடியாதாம், அமெரிக்காவில்தான் செய்ய முடியுமாம்.

விஸ்வரூபம் முற்றிலும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும், அதி நவீன ஆடியோ முறையிலும் உருவாகியிருப்பதால் அதன் எடிட்டிங் வேலைகளை அமெரிக்க லேபில் மட்டுமே செய்ய முடியும் என்பதால் அதற்கான நடவடிக்கைளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

நீக்கப்படும் காட்சிகள் :

1. படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது வரும் குர்ஆன் வசனங்கள் நீக்கப்படும்.
2. குர்ஆன் வசனத்தின் பின்னணியில் அமெரிக்கரின் தலை துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.
3. அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுக்க கமல் பிரார்த்தனை செய்யும் காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை காட்சிகளும் நீக்கப்படும்.
4. முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலைமறைவாக இருந்தார் என்ற வசனமும் நீக்கப்படும்.
5. ‘முஸ்லிம் அல்லாதவர்களை அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை‘ என்று நாசர் பேசும் வசனம் உட்பட ஏழு காட்சிகள் நீக்கப்படுகிறது.

இந்த வேலைகள் எல்லாம் முடிய சில நாட்கள் ஆகும் என்பதால் படம் வெள்ளிக்கிழமை (தமிழ் நாடு ) திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : www.superwoods.com & dinakaran news paper



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top