அட அப்படியா....? !!! (Must read)

அசர வைக்கும் டோயோர நிறுவனம்:

முதலில் இந்த விடியோவை பாருங்கள். இது என்ன காரா? அல்லது சுமார்ட்போனா? அல்லது கேம் மெசின்?


உங்கள் விடையை சரியானதா...?!

டோயோர நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யும் நவீன கார் 'Fun-Vii'. குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்-களில் வரும் காரைபோல உருவாக்கியிருக்கிறார்கள். இந்தனை ஜப்பானில் நடக்க இருக்கும் 42-ஆவது டோக்யோ மோட்டார் ஷோவில் 'Fun-Vii' கார் கலந்துகொள்ள இருக்கிறது.


காரின் விலை, வேகம், இதர சிறப்பு அம்சங்கள் பற்றிய செய்திகளை இன்னும் டோயோர நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.

மேலும் இந்த காரைப்பற்றிய தகவல்கள் பெற இங்கே தொடுக.
Thanks : 3.bp.blogspot.com


தேன் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெடாமல் இருக்கிறதே.... எப்படி?

இதற்குக் காரணம் தேனீக்கள், தேன் செய்யும் முறையில் இருக்கிறது. தேனீக்கள் பூக்களிடம் விஜயம் செய்து சேகரிக்கும் பூந்தேனை அப்படியே சேர்த்து வைப்பதில்லை. வயிற்றில் உபரியாகா இருக்கும் சிறிய பையில் அதை வைத்து தேன்கூட்டுக்குக் கொண்டுவருகிறது. வயிற்றுக்கும் இந்தப் பைக்கும் ஒரு வால்வு இருக்கிறது. முதலில் இந்த தேனில் இரசாயன மாற்றங்கள் செய்கின்றது, குறிப்பாக தேனில் இருக்கும் சக்கரையில், அதன் பின் தேனில் இருக்கும் தண்ணீரை நீக்கிவிடுகிறது. அது தேன் கூட்டில் இருக்கும் உஷ்ணத்தால் ஏற்படுகிறது.

தேன் கூட்டில் சேகரித்து வைக்கப்பட்ட தண்ணீரற்ற தேன், சரம் கெடவே கெடாது. லட்சம் வருடம் ஆனாலும் கெடாது என்கிறார்கள். நாலாயிரம் வருடத்திற்கு முன் இறந்து போன எகிப்திய ஃபாரோ மன்னனோடு பிரமிட்டுக்குள் வைக்கப் பட்ட தேன் இதுவரை கெட்டுப் போகவில்லை!.
தேனீகள் மலர்களில் மட்டும் தேன் சேகரிப்பதில்லை. சில சமயம் மற்ற பூச்சிகளிலிருந்தும் அல்லது செடிகளின் மற்ற பாகங்களிலிருந்தும் சேகரிக்கிறது! சாதாரணமாக ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டுவர ஒரு தேனீ சுமார் "45,000 மைல்" துரம் அலைந்து உழைக்க வேண்டும்.

உழைப்புக்கு மறுபெயர் தேனீக்கள்!!!!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top