ஷகீரா - A.R. ரஹ்மான்

உலக இசை கலைனர்களுக்கு இப்போது விருது வழக்கும் நேரம். வருடா வருடம் வழக்கப்படும் உலக புகழ் பெற்ற NRJ இசை விருது (NRJ award music) கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.


இந்த வருடம், அகில உலக சிறந்த பாடலுக்கான விருது (International Song of the Year) 2011- வருடம் 'வாக்கா வாக்கா புகழ் 'ஷகீராவுக்கு கிடைத்துள்ளது. மேலும், இவர் சிறந்த பெண் பாப்-பாடகியாகவும் (International Female Artist of the Year) தேர்வு செய்யப்பட்டு விருது வழக்கப்பட்டது.
கொலம்பியாவைச் சேர்ந்த இவர், பாடகி, பாடலாசிரியை, நடனக் கலைஞர் என பன்முகம் கொண்டவர். அவரது நடன அசைவுக்கும், குரல் இனிமைக்கும் எக்கச்சக்க ரசிகர்கள். மேலும் இவர், இடுப்பை, வளைத்து ஒடித்து ஆடிப் பாடலுக்கு உலகெங்கும் எக்கச்சக்க ரசிகர்கள்.

இவர், 2 முறை கிராமி விருது பெற்றவர். நடந்து முடிந்த 2010 தென் ஆப்பிரிக்க உலகக் கால்பந்துப் போட்டியின் தீம் (theme) மியூசிக்கான வாக்கா வாக்கா... பாடலை பாடி மேலும் பிரபலமானவர்.
குட்டி தகவல் :-
"காளி - தி வாரியர் காடஸ்" (Kaali- The Warrior Goddess) என்ற பெயரில் உருவாகும் படத்தில் 'காளி' வேடத்தில் நடிக்கப் போகிறார் ஷகீரா. ஹைகிரவுண்ட் என்டர்டெய்ன்மென்ட் (High Ground Entertainment Ltd) நிறுவனம் சார்பில் கரண் அரோரா இப்படத்தை தயாரிக்கிறார்.


இசை உலகில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் இசை அமைப்பாளர்களுக்கு வழக்கப்பட்டு வரும் விருது தான் கிறிஸ்டல் விருது


இந்த வருடம் அதனை பெறுபவர் வேறு யாருமில்லை A.R. ரஹ்மான் தான். உலக இசை மற்றும் கலையில் தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்தி வரும் நம்ப இசைப்புயலுக்கு கிறிஸ்டல் விருது வரும் 26-தேதி வழங்கப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் கிறிஸ்டல் விருது அளிக்கப்படவுள்ளது.

இந்த உயரிய விருது வாங்கும் நம்ப இசை கலைனர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நீங்களும் மறக்காமல் ஒரு வோட்டு போட்டு உங்கள் வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்கலாம்.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top