சமையல் குறிப்பு : கூழ் வற்றல் குழம்பு

நம் வீட்டில் அரிசியில் வடகம் செய்து வைத்திருப்பர். அதனை கொண்டு கூழ் வற்றல் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். சும்மா காரசாரமா செய்து சாப்பிடுப் பாருங்கள். அதன் ருசியே தனி தான்.


தேவையான பொருட்கள் :

கூழ் வற்றல் வடகம் - 20
பூண்டு - 20 பல்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
சாம்பார்பொடி - இரண்டரை (2 1/2) ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 7 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:
  • கூழ்வற்றலை கொதிக்கும் நீரில் போட்டு ஊறவைக்கவும் (அரை மணியிலிருந்து முக்கால் மணிநேரம்).

  • வெங்காயம், பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மேலே கூறியுள்ள தாளிக்கும் பொருள்களை போட்டு, பொரிந்ததும் வெங்காயம்+பூண்டு சேர்த்து சற்று வதக்கவும்.

  • பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  • புளியையும் உப்பையும் 6 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி சாம்பார்பொடி சேர்த்து கலக்கி, வதங்கிய வெங்காயம் பூண்டு, தக்காளியுடன் ஊற்றவும்.

  • அது நன்கு கொதித்து காயில் உப்பு சார்ந்ததும், ஊறவைத்த வற்றலை அதில் இருக்கும் நீரை வடித்துவிட்டு குழம்பில் சேர்க்கவும்.

  • கால் மணிநேரம் கழித்து கெட்டியானதும் இறக்கவும்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

Thanks : நஸ்ருல்லாஹ்



6 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

பார்த்தாலேயே தண்ணி ஊறுது நாக்குல.. ஸ்லர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்... யம் யம் ;-)

Kolipaiyan said...

வருகைக்கு நன்றி கருந்தேள்.

என்னால் முடிந்தவை said...

WHAT IS கூழ் வற்றல் வடகம் \\\\\\\\???????

தெய்வசுகந்தி said...

good!!!!!!!

Kolipaiyan said...

@தெய்வசுகந்தி

வருகைக்கு நன்றி தெய்வசுகந்தி!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆஹா... கண்ணா கட்டுதே..

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top