சமையல் குறிப்பு : வாழைப்பூ வடை

இயற்கையின் படைப்புகளில் வாழைப்பூ மிகவும் அற்புதமானது. எண்ணற்ற மருத்துவக் குணங்களை கொண்ட இந்த வாழைப்பூ கொண்டு மிகவும் வித்தியாசமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 2 கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 1
துவரம்பருப்பு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 12
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லித்தழை சிறிது - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
  1. வாழைப்பூவை நரம்பை எடுத்து சுத்தம் செய்யவும்.
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. துவரம் பருப்பை ஊறவைத்துப் அரைகுறையாக அரைத்துக் கொள்ளவும்.
  4. காய்ந்த மிளகாய் + சோம்பு + சீரகம் + உப்பு ஆகியவற்றை லேசாக தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
  5. வாழைப்பூவை அம்மியில் வைத்து, ஒன்றிரண்டாக அரைத்து, அதன் துவர்ப்பு போக, நன்றாகப் பிழிந்துவிடவும்.
  6. அத்துடன் அரைத்த விழுது + பருப்புக் கலவையைக் கலந்து வெங்காயம் + பொடியாக நறுக்கிய மல்லித்தழை + கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துப் பிசையவும்.
  7. வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பிசைந்த மாவை சிறு வடைகளாகத் தட்டி, பொன்னிறமாக வேகவைக்கவும். ருசியான வாழைப்பூ வடை ரெடி.
குறிப்பு
சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top