மருதாணியின் மகிமை


பெண்களின் அழகு சாதனைகளில் தவிர்க்க முடியாத ஓன்று இந்த மருதாணி. மருதாணியை மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி என்றும் பெயரிட்டு அழைப்பார்கள். மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்துக்வருகிறார்கள். இதுவே பவுடராக இன்று நகரத்து பெண்களிடம்...

இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணக்கள் நிறைத்துள்ளது. அதை பற்றி ஒரு பார்வை.


மருத்துவப் பயன்கள்:

மருதாணி இலை கிருமி நாசினி. கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.


உறக்கமின்மை : தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி : இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர : இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

புண்கள் : ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.


இங்கே சுட்டி காட்டியுள்ளது சில மருத்துவ பயன்களே. இன்னும் எண்ணற்ற பயன்கள் இதில் அடங்கியுள்ளது.

பவுடராக வரும் இந்த மருதாணியில், எந்த அளவு அதன் மருத்துவ குணக்கள் அழிக்கபடாமல் வரும் என்பது கேள்விக்குறியே. முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த பாருங்கள்.

Source : மூலிகைவளம்

என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top