எதுவும் நடக்கும் - திரைபட விமர்சனம்

நண்பர் ஒருவர் ஒரு படத்தை எனக்கு தந்து அதை பார்த்துவிட்டு பதிவும் போடா சொன்னார் சில வாரங்களுக்கும் முன்னர். நேற்று இரவு வெகு நேரம் எனக்கு தூக்கம் வரவில்லை. சரி தூக்கம் வரும்வரை எதாவது படம் பார்க்கலாம் என்று நினைத்த போது நண்பர் தந்த எதுவும் நடக்கும் படம் நினைவுக்கு வந்தது. இந்த படம் எப்போ ரிலீஸ் ஆனதுனே தெரியல. அதை தான் இந்த பதிவில் எழுதுகிறேன்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நிறைவேறாத கனவை கருவாக வைத்து, சமுதாயத்தில் நிராகரிக்கப்படும் ஒரு மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை மாற்றிக் கொள்ளும் போது என்ன நடக்கும் என்பதுதான் கதை.


படத்தோட கதை என்னனா ...

சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவு நம்ப ஹீரோ நாகாவுக்கு (கார்த்திக்குமாரு). ஆனால் நிஜத்தில் ஒரு பணக்காரரின் (ராமலிங்கம்) வீட்டு வேலையாள். அவருக்கு வாய்த்த சொர்ணா என்ற மனைவியோ அடிக்கடி சண்டைபோடும் ரகம். இதனால் அவரது கலையுலக கனவு கலைந்து போகிறது. அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் லோக்கல் டிராமா, கூத்து கச்சேரி தான்.

ஒவொரு பௌர்ணமி அன்றும் இவர் வேதகிரி மலையில் இருக்கும் கிருபாஜி சுவாமிகளை சந்தித்து அருள்பெருவது வழக்கம். அதன் போல அன்று வரும் வேளையில் சுவாமிஜிகள் உன்வீட்டில் மரணம் நிகழ இருக்கிறது. என் இங்கு வந்தாய் என்று கேட்கிறார். அங்கிருந்து காரில், தன வீட்டிற்கு விரைந்து வரும்போது ஒரு செல் போன் அழைப்பு...

அமெரிக்காவில் இருந்து நம்ப ஹீரோயினி பூஜா (அபர்ணா நாயர்) வருகிறார் தன் தாத்தா வீட்டிற்கு. வந்ததும் - தாத்தாவை அலைகிறார் - பிறகுதான் அவருக்கு புரிகிறது சுவாமிஜிகள் சொன்னது. ஒருவேளை தன் பேத்தியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் காரில் விரைந்து...

இந்நிலையில், நம்ப ஹீரோ நாகாவை சந்திக்கும் பூஜா அவனது நடிப்பு திறமையை கேலி செய்ய - பிறகு அவளது வருகை குறித்து நாகா கேட்ட - தன் காதலை தாத்தா மூலம் நிறைவேற்ற வேண்டியே இங்கு வந்ததாக சொல்கிறாள்.

அன்று இரவே, இவளுக்கு தனிமை வெறுக்க, நாகவிடம் ஏதேனும் நடிக்க சொல்லி கேட்க - அவனும் நாம் இருவரும் கணவன் - மனைவியாக நடித்து பார்க்கலாம் எனக் கூற, அப்படியே செய்யும் ஹீரோ, ஒரு கட்டத்ததில் பூஜாவை தன் நிஜ மனைவியாக கருதி, அடி - உதையில் இறங்கி, ஏளனம் செய்ததையெல்லாம் சுட்டிக் காட்டி போட்டுத் தள்ள பார்க்கிறார். அப்போது தான் பூஜாவுக்கு ஒரு உண்மை புரிகிறது... இந்த ஹீரோவிடம் மாட்டி ஏற்கெனவே அவன் உண்மையான மனைவி கொலையுண்டு இறந்து கிடக்கும் சமாச்சரம். இந்த ஆபத்தை உணரும் பூஜா, அதில் இருந்து தப்பித்தாரா, இல்லையா? என்பது தான் மீதி கதை.


படத்துல என்னை கவர்த்தவைகள் பல...

வித்தியாசமான கதை களத்தில் திகிலாக காட்சி + ஒரே ஒரு லொகேஷனில் பெரும்பாலான கதையையும், காட்சிகளையும் படம் பிடித்து பயமுறுத்தி இருக்கும் டைரக்டர்கள் கே.மகேஷ்வரன் + ரொஸாரியோ.

சில இடங்களில் டிவி சீரியல் மாதிரியான காட்சிகள். மொத்தமே 6 நபர்களே நடித்து இப்படியோரு படத்தை தருது மிக கடினமே. இருந்தாலும் டைரக்டர்கள் இருவரையும் பாராட்ட வேண்டும். கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும் திகில் படங்களில் இருக்கும் ஒரு வித திகில்தனம் இதில் மிஸ்ஸிங்.

பெர்னார்டு டேவிட்டின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம்.

இசை சுமார் என்றாலும் அறிமுக படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றா பயன் படுத்திய ராஜ் -அய் பாராட்டலாம்.

யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும், வானம் வசப்படும், பொய் சொல்ல போறோம் ஆகிய படங்களில் நடித்த நம்ப ஹீரோ கார்த்திக்குமார் - அப்பாவியாக பழகி சைக்கோவாக மாறுவது எதிர்பாராத திடுக். நல்ல நடிப்பு. சில இடங்களில் நமக்கே சந்தேகம் வரவழைக்கும் நடிப்பு.

நம்ப ஹீரோயினி அபர்ணா, தனுசுடன் "புதுகோட்டையில் இருந்து சரவணன்" படத்தில் நடித்த அபர்ணாவை சில இடங்களில் - முகபாவனையில் நினைவு படுத்தினாலும் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். அபர்ணாவின் இயலாமை, தவிப்பு, உயிருக்குப் போராடும் அவலம் எல்லாமே இயல்பாக, தத்ரூபமாக இருக்கு.


எதுவும் நடக்கும்- திகில் பட விரும்பிகள் ஒருமுறை பார்க்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க.

நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top