கந்தசாமி - விமர்சனம்

கொக் கொக் ....கோ...கொக் ......கக் ......சீ... எனக்கும் இந்த சவுண்ட் ஈசியா ஒட்டிகிச்சு. என்ன பண்ண ..? சில வாரம் ஆச்சு அந்த கொடுமையை மறக்க. என்னதுன்னு கேக்க வரீங்க...? புரியுது... புரியுது... போன சில வாரம் முன்பு, நான் ஒரு படம் பார்க்க போனேன்னு சொன்னேனே ... நினைவிருக்கா? அத பத்தி தான் சொல்ல வந்திருக்கேன்.

இனி கதைக்கு வருவோம்....

திருப்போரூர் முருகன் கோவில் மலை மீது உள்ள மரத்தில் தங்கள் குறையை எழுதிக் கட்டி விட்டால் போதும் சில தினங்களில் அத்தனையும் கிடைத்து விடுகிறது. இந்த செய்தி நாடெங்கும் பரவி மக்கள் கூட்டம் கோவிலில் அலைமோதுகிறது. போலீசார் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். டி.ஐ.ஜி. பிரபு உண்மையை கண்டு பிடிக்க வருகிறார். இது ஒருபுறம்.

நேர்மையான சி.பி.ஐ அதிகாரி ஒருவர், கணக்கில் காட்டாத பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்களிடம் இருந்து எடுத்து கடவுள் கந்தசாமி வாயிலாக குறை என்று வரும் பக்தர்களுக்கு பணத்தை பங்கிட்டு தருகிறார்.

அரசாங்க வங்கியில் ஆயிரம் கோடியைக் கடனாக வாங்கி அதை மோசடி செய்த ஆஷிஸ் வித்யார்த்தி ஒளித்து வைத்திருக்கும் பணத்தைக் கண்டுபிடிக்கிறார். தன் தந்தையின் இந்த நிலைமைக்குக் காரணமான சி.பி.ஐ அதிகாரியான கந்தசாமியைக் பழிவாங்க துடிக்கும் ஸ்ரேயா.

சி.பி.ஐ அதிகாரியிடம் பணத்தை இழந்துவிட்டு பழிவாங்கத் துடிக்கும் வில்லன்கள்!

என்னவாகிறார் கந்தசாமி என்பதுதான் கதை!

பிரம்மாண்டமான செட்கள்... சுத்திச் சுத்தி பறக்கும் ஹெலிகாப்டர்... விதவிதமான கார்கள்... உடைந்து நொறுங்கும் கண்ணாடிகள் என்று ஏகத்துக்கு செலவழித்தவர்கள் ஸ்ரேயா காஸ்டியூமுக்காகவும் கொஞ்சம் ஒதுக்கி இருக்கலாம். பாவம் இந்த அம்மணி, குழந்தையா இருந்தப்ப போட்ட டிரஸ் தான் போட்டுக்கிட்டு வருது.

வடிவேலு ஒருமுறை சிரிக்க வைக்கிறார். வேஸ்ட்.

சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை எல்லாம் காட்சிஆக்கும்போது கோட்டைவிட்டிருக்கிறார்கள். அதிலும் எக்ஸ்யூஸ்மீ கந்தசாமி பாடல் டோட்டல் வேஸ்ட்.

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதும், விக்ரம் வில்லன்களிடம் உண்மையை சொல்கிறார், அப்பாடா சீக்கிரம் முடிந்து விடும் என்று மனதை தேற்றிக்கொண்டால், மெக்ஸிகோ... புது வில்லன் அலெக்ஸ் என கந்தசாமி மீண்டும் ஆரம்பித்து... போதுமடா (கந்த)சாமி.... தாங்க முடியவில்லை.

விக்ரமின் மிடுக்கான நடிப்பின் மூலம் மினுமினுக்கிறது 'கந்தசாமி' யின் கதாபாத்திரம். விதவிதமான கெட்டப்புகளில் அசத்துகிறார் விக்ரம். அதுவும் சேவலாக வந்து அவர் செய்யும் சேட்டை, சி.பி.ஐ. அதிகாரியாக வரும் கந்தசாமின் கம்பீரமான நடை என அதிலும் தனி நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெண் வேடத்தில் சார்லியிடம் ... கொள்ளை அழகு.

ஹாலிவுட் ஸ்டைலை பிரதிபலிக்கும் அதிரடி சண்டை சாகச படம்.

ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சி.பி.ஐ. உயர் அதிகாரியாக வந்து விக்ரமுக்கு உதவும் இடத்தில் கைத்தட்டல் பெறுகிறார்.

பக்க வாதம் வந்தது போல நடித்து கடைசியில் பக்க வாதத்திற்கே பலியாகிற ஆசிஷ்வித்யார்த்தியும் அருமை.

மிரட்டியிருக்கிற இன்னொரு சாதனையாளர் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். சபாஸ்.

கந்தசாமி தனி ஆள் இல்லை. அவனுக்குள் ஒரு ஜெண்டில்மேன், ஒரு இந்தியன், ஒரு முதல்வன், ஒரு ரமணா, ஒரு சாமுராய், ஒரு அந்நியன், ஒரு சிவாஜி கலந்த கலவை.

'கந்தசாமி' - ஒருமுறை பார்க்கலாம். கொக்கரக்கோ கும்மாங்கோ ...

குறிப்பு : மூணு வாரமா ஒரே வேலை வேலை வேலை. அதனால கந்தசாமி படத்தோட விமர்சனத்தை உடனே எழுத முடியல.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.



1 comments:

Anonymous said...

where i can get the "kok" "kok" mp3 tone from kandhasamy?

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top